கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், சென்னை-4. பக்கங்கள்: 140,
* உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகம். ஷேக்ஸ்பியரின் முதல் 28 வருடங்களைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப் பெறாத நிலையில் (ஊகத்தின் அடிப்படையில்) இந்த நூலை எழுத முற்பட்டிருக்கிறார் ஆசிரியர். சுவாரஸ்யமான பல நாடகங்களை எழுதியவரின் வாழ்க்கையிலிருந்து, ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்களை திரட்ட முடியுமா என்ற முயற்சி அவ்வளவு அவசியமாகத் தெரியவில்லை. ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாக உலக அளவில் பேசப்படும் நாடக ஆசிரியரின் எழுத்துக்களிலேயே எல்லா சுவாரஸ்யங்களும் அடங்கியிருக்கிறதே? நாடகச் சுருக்கங்களுக்கு இன்னும் சற்று கூடுதலான பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.