எல்.கே.எம்., பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96).
ராமாயணத்தின் கதாபாத்திரங்களில் பெரிதும் விமர்சனம் செய்யப்படுபவள் அகல்யை ஆவாள். மனத்தால் மாசுபட்டவளாக வால்மீகி கூறும் அகல்யை, இந்நூலாசிரியரால் மனத்தளவில் கூட மாசு படாதவள் என்று அகல்யை போற்றப்படுகிறாள்.
அகல்யை மாசுபட்டவள் எனில் விசுவாமித்திர முனிவர், அவளுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பரிந்துரைப்பாரா? என்று ஆசிரியர் விடுக்கும் வினா, நம்மைச் சிந்திக்க வைக்கிறது (பக்.12).
பிரமன், இரட்டை முகம் உள்ள பசுவைக் கேட்பதும், கவுதமர், பூலோகம் வந்து, கன்று போடும் நிலையில் இருந்த பசுவை எடுத்துச் சென்று பிரமனிடம் காண்பித்து, அகல்யையினை அடைவதும் படிக்க மிகவும் சுவையாக இருக்கிறது (பக்.30-37). அகல்யை குற்றமற்றவள் என்று ஆசிரியர் விவரிக்கும் இடங்கள் மிகவும் அருமை (பக். 82-94) ஆசிரியரின் உயர்ந்த எண்ணமும், புதிய சிந்தனையும் நம்மை மகிழ்விக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.