சங்கீதா பதிப்பகம், 7, வி.எம்., தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 139. )
சிறந்த கவிஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறக்கின்றனர். அப்படிப் பிறந்தவர் பாரதி. அந்த மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் அளித்திருக்கிறார் நூலாசிரியர் பாரதி அப்பாசாமி. படிப்பதற்கு எளிமையாக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளன. இதை நாடகமாக அரங்கேற்ற விரும்புவர்களுக்கென தனியாக நாடக உத்திகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கி இருக்கிறார். ஆசிரியரின் முதன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் இதை மேடை நாடகமாக நடத்தலாம் என்று அறிவித்திருப்பது பாரதி மீது நூலாசிரியர் வைத்திருக்கும் அன்புக்குச் சான்று.