அருந்ததி நிலையம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).
அருளாளர்கள் அத்தனை பேருமே உலகம் உயர்வதற்கான ,மானுடம் உயர்வு நலம் அடைவதற்கான சிறந்த பெருநெறிக் கருத்துக்களையே
போதிக்கின்றனர். மனிதர்களின் கவனம் மட்டும் அவர்கள் கருத்துக்களின்பால் கண நேரம் திரும்புமேனும் மகத்துவம் நிகழ்ந்துவிடும். அப்படி மனித
சமூகம் வெளிச்சப் பாதையில் நடக்க விரும்பியே வள்ளலார், அருட்பிரகாச வழியைக் காட்டியுள்ளார்.
அவரின் சமரச சுத்த சன்மார்க்க சிந்தனைகள், புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அருளாளர்களின் ஒப்பரிய
கருத்துக்களோடு ஒப்புமை உடையதாகவே மிளிர்கின்றன.
அதை இந்த நூல் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. திருக்குறள் கருத்துகளோடு சித்தர் கருத்துகளுடனும் ஒப்பிட்டு உரைக்கிறது. ஏராளமான
செய்யுள்கள் மேற்கோள்களாக இடம் பெறுவதால், அவற்றைப் படிக்கும் வாய்ப்பும் அமைவதோடு, வள்ளலாரின் திருநெறி, ஒருமைப்பாடு, உயிரிரக்கம்
பற்றி எல்லாம் அறிந்து, அறிவை ஒளிபெறச் செய்ய உதவுகிறது. பக்தி நெறி ஒளிரச் செய்யும் பல்கலைப் பேழை இந்த நூல் எனலாம்.