அருணகிரி பதிப்பகம், 26, கந்தசாமி கோயில் தெரு, பெரம்பூர் பேரக்ஸ், சென்னை-12. (பக்கம்: 320).
திருப்புகழ் பாமாலை மீது பற்றும் பாசமும் கொண்ட அருணகிரி, பல்வேறு ஆன்மிக இதழ்களில்தாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, இந்த நூலை, திருப்பதி - திருமலை தேவஸ்தான நிதி உதவியுடன் வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தில், ஆசிரியரது காசி யாத்திரை. இமயமலை சஞ்சாரம் உட்பட பல விஷயங்கள் இருந்தாலும், அனைத்தும் ஆன்மிக தொடர் பானவை தான். ஆசிரியர் வாழ்நாளெல்லாம் திருப்புகழின் பெருமையையும், அதில் பொதிந்துள்ள கருத் துக்களையும் அரிய நயங்களையும் அன்பர்களுக்கு எடுத்துச் சொல்வதிலேயே செலவழித்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது நம்மால் ஆச் சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
இதழ்களில் அவ்வப்போது பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக்கும்போது, ஓரளவு `எடிட்டிங்' தேவை. இதை ஆசிரியர் கவனத்தில் கொள்வது நல்லது.