கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
நமக்கு ஏற்படுகிற பல பிμச்னைகளுக்குக் காμணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை? பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்டை, அண்டை வீட்டாருடன் சண்டை,
வீதியில் சண்டை, பொது இடத்தில் சண்டை, முட்டல் மோதல்கள் அனைத்தையும் தீர்த்து விடலாம். உங்களைச் சுற்றி என்றென்றும் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.