கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை600 018; தொலைபேசி: 0444200 9601, 4200 9603, 4200 9604
விபத்தில் காயம் அடைந்து சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, எவ்வளவு சீக்கிரம் முதல் உதவி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் உதவி செய்யும் நபரே "ஐயோ' என்று பதறி, காரியங்களைச் செய்ய, ஆபத்தில் இருப்பவரும் "ஐயய்யோ' என்று பயந்துவிட்டால அவ்வளவுதான். எல்லாம் சிக்கலாகிவிடும். ஒருவருக்குப் பலத்த அடிபட்டிருந்தாலும்,
பதற்றப்படாமல் அவருக்குத் தேவையான முதல் உதவியைக் கொடுத்து உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது. அவசியம் ஏற்படும்போது முதல் உதவிசெய்ய வேண்டும் என்று அனைவருக்குமே தோன்றும். ஆனால், என்ன செய்ய வேண்டும்,எப்படிச் செய்யலாம் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. சாலை விபத்துகள், தீ விபத்துகள் என அடிபடும் விஷயங்களுக்கு மட்டும்தான் முதல் உதவி என்றில்லை. பாம்பு கடித்தால், வலிப்பு வந்தால்... போன்ற அனைத்துக்குமே முதல் உதவி அவசியம். அனைத்து அவசரங்களுக்குமான முதல் உதவி பற்றிய அத்தனை விவரங்களையும் விரிவாக,விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்.