பக்கம் : 296
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
லலிதா சஹஸ்ரநாமம்... அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நிறைந்திருக்கு ம் அந்தப் பேரரருள் சக்தியை, "அம்மா...' (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது. நித்ய சவுந்தரியான லலிதா தேவி இப்படி இருக்கிறாள்... இப்படிச் சிரிக்கிறாள்... இவ்வா‘றெல்லாம் அருள் மழை பொழிகிறாள் என்று சம்ஸ்கிருதத்தில் அமைந் திருக்கும் வரிகளை எல்லாம் எவரேனும் தமி
ழில் விளக்கினால் எப்படி இருக்கும்..? கற்கண்டாக இனிக்கும். பொருள் புரிந்து பக்தியில் கரைவது சிறப்பானதல்லவா! அதைச் செய்திருக்கிறது அழகிக்கு ஆயிரம் நாமங்கள் என்ற இந்த நூல். நூலாசிரியர் ஸ்ரீ வேணுகோபாலன், இதற்கு முன் "அழகே அமுதே' என்று சௌந்தர்ய லஹரியைப் படிக்க வைத்தவர்.