இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வர ஆதிசங்கரர் நமக்களித்த ஆன்மிக மருந்து இது.
சாலையில் கையில் தடியோடு ஒருவன் நடந்து கொண்டிருக்கிறான்.மற்றொருவன், கைல் பிஸ்கட்டோடு சென்று கொண்டிருக்கிறான். நாய்கள் பிஸ்க்கட்டோடு செல்பவனிடம் பாய்ந்த்து ஓடும்.அது போலத்தான் நாமும் சுகங்களைத் தேடி ஓடுகிறோம். வலி ஏற்படுத்தினாலும் நம்மைப் பக்குவப்படுத்தும் உண்மைகளிலிருந்து நகர்ந்து செல்லப் பார்க்கிறோம்.'உடல் என்பது நான் அல்ல' என்பதை நாம் அறிவது இல்லை.அறிந்தாலும்,அதை முழுவதும் ஏற்காமல் மாயையில் சிக்கி உடலே நாம் என்று நினைத்து பலவிதச் செயல்களைச் செய்கிறோம். அந்த மாயை மெத்தப் படித்தவர்களையும் விடுவது இல்லை.
எனில் இதிலிருந்து விடுபடுவது எப்படி?இதை வென்று ஜெயிப்பது எப்படி?
ஆதிசங்கரர் தன் 'பஜ கோவிந்தம்' மூலம் இருள் குகையிலிருந்து வெளியேற நமக்கு வழிகாட்டுகிறார்.அதைஅழகு தமிழில் விளக்கி தீப்பந்தம் பிடித்து முன் செல்கிறது இந்நூல்.