விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப உண்பதற்குச் சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் உணவு வகைகளைச் சமைப்பதும், சமையல் கலையில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் தெரிந்துகொள்வதும் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம்.
நல்ல உணவு நல்ல சிந்தனையைக் கொடுக்கும். சுவையான விருந்து மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். மகிழ்ச்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அப்படித்தான், இன்றைய பரபரப்பான குடும்பச் சூழலில் நமது மனதில் எவ்வளவு கோபம், வெறுப்பு இருந்தாலும் நல்ல சுவையான உணவை உண்ணும்போது, மற்ற எல்லாம் பறந்துபோய், புத்துணர்வு பிறந்துவிடும்.
வீட்டில் சமையல் செய்யும் எளிய குடும்பத்தினர் முதல்
உயர்தர சைவ ஹோட்டலில் பணிபுரியும் சமையல்காரர்கள் வரை படித்துத் தெரிந்துகொண்டு செய்து, பரிமாறி, சுவைத்து மகிழவேண்டிய 79 வகையான சமையல் அயிட்டங்களையும், அவற்றைச் செய்யத் தேவையான பொருட்களையும் இந்நூலில் விளக்கிக் கூறியுள்ளார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
ஒவ்வொன்றிலும் உப்பு, மிளகாய், எண்ணெய் எவ்வளவு சேர்க்கவேண்டும், சமைத்த பதார்த்தங்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றுடன் என்ன சேர்க்கவேண்டும், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார். சமையலின்போது ஏற்படும் குறைகளைக் களையும் விதமாக இந்த நூலில் உள்ள 200 வினா_விடைக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.
படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்... சமையல் செய்து அசத்துங்கள்... சுவைத்து மகிழுங்கள்.