விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
யோகா, உடற்பயிற்சி ஆகியவை உடலுக்கு மட்டும் உரம் சேர்ப்பவை. ஆனால், சூரிய நமஸ்காரம் என்பது உடலுக்கு வலிமையைக் கொடுப்பதோடு, ஆன்மிக உணர்வையும் வளர்க்கிறது. அதேபோல் சூரிய நமஸ்காரத்தில் மந்திர ஜபமும் இருப்பதால் மனதுக்கும் வலிமை சேர்க்கிறது.
சூரிய நமஸ்காரம் செய்யும்போது படிப்படியாக நிற்க வேண்டிய நிலைகள்; உடலை பாந்தமாக வளைக்க வேண்டிய நிலைகள்; படிப்படியாக சூரிய நமஸ்காரம் செய்யும் முறை; ஒவ்வொரு நிலையிலும் உச்சரிக்க வேண்டிய ஆதித்யனைப் போற்றும் மந்திரங்கள்; சுவாசம் மேன்மேலும் கட்டுப்படும்போது, சிறிய மந்திரத்திலிருந்து நீளமான மந்திரங்களை உச்சரிக்கும் முறை; மந்திரத்தால் மனத்தை சுலபமாக ஒருமுகப்படுத்துதல்; நமஸ்காரம் செய்ய வேண்டிய சூரிய வேளை; எவ்வளவு நேரம் செய்யலாம், குறிப்பாக அளவுக்கு அதிகமாக எவ்வளவு நேரம் செய்யக்கூடாது \ ஆகிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத் மிக எளிமையாகவும் சுவையாகவும் இந்த நூலில் விளக்கியிருக்கிறார்.
சூரிய நமஸ்காரத்தின் நாயகனும், நாம் அன்றாடம் விண்ணில் நிமிர்ந்து பார்த்து வணங்கும் சூரியனின் பலம் என்ன; சூரிய தேவன் நமக்கு அளிக்கும் நன்மைகள் யாவை; சூரியன் என்பவன் உண்மையில் யார்; அவர் யாருடைய அம்சம்; சூரியனைப் போற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன; அவரைப் போற்றி நம் தீவினைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன போன்ற தகவல்களையும் இந்த நூல் உங்களுக்குத் தருகிறது.
சூரியன் எழுந்தருளியிருக்கும் கோயில்களைப் பற்றியும், அவற்றில் சூரியனுடன் ஏனைய நவகிரக நாயகர்களும் எழுந்தருளியிருக்கும் நிலைகளைக் குறித்தும், அங்கே நாம் சூரிய தேவனை வழிபட வேண்டிய முறைகள் பற்றியும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் ஆன்மிக அன்பர்களுக்கு சிறந்த வழிகாட்டி.