எல்.கே.எம்., பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 176).
கற்பனையின் ஊற்றாகக் கவிதைகள் விளங்கி, படிக்கின்றவர்களை ஓர் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்த வேண்டும். அத்தகு ஆற்றல், கவிமாமணி மதிவண்ணனின் கவிதைகளுக்கு உண்டு என்பதை இந்நூல் தெரிவிக்கிறது. "தேசம் தெய்வம் உன்னிரு விழிகள், தொண்டும் அன்பும் தொடரும் வழிகள் என்றும், அணிலைப் பார்த்து "வால் முளைத்த சுறுசுறுப்பு என்றும் வாழைப் பூஜை "புரட்சிப் பூ என்றும் வர்ணிப்பதே அழகு. அருமையான இக்கவிதை நூலை அனைவரும் படிக்கலாம்.