விலைரூ.200
புத்தகங்கள்
Rating
நன்மொழி பதிப்பகம், 16, கங்கை தெரு, வசந்த் நகர், புதுச்சேரி-3. (பக்கம்: 200)
புதுவையில் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், "திருமந்திரத்தில் உயிர் கோட்பாடு என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதை, "உயிர் பயணம் என்ற தலைப்பில் தமிழில் நூல் வடிவிலும் வெளியிட்டிருக்கிறார்.
இதே மையக் கருத்தை, ஆங்கிலம் தெரிந்த அன்பர்களுக்காக இந்த ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறார். ஆசிரியருக்கு சைவ சித்தாந்தத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் உள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை இந்த புத்தகத்தைப் படிக்கும்போது நாம் தெரிந்து கொள்கிறோம்.
எளிய ஆங்கிலத்தில் சற்றே கடினமான தத்துவ சித்தாந்தத்தை ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார். ஆன்மா பற்றி சித்தாந்தம் என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவோர் இந்த நூலை படித்து பார்க்க வேண்டும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!