விலைரூ.150
புத்தகங்கள்
யோகா உங்கள் கையில்
விலைரூ.150
ஆசிரியர் : ஜெ.ஜெய வெங்கடேஷ்
வெளியீடு: ஷான் லாக்ஸ் பப்ளிகேஷன்
பகுதி: யோகா
Rating
61, டி.பி.கே. ரோடு, மதுரை -03.
(பக்கம்: 188)
உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிரிப்பு மட்டுமல்ல. யோகாவும்தான். இதை எப்படி முறையாக செய்வது என்பது குறித்து, 142 யோகாசனங்கள் மூலம் சிறந்த மருத்துவ எழுத்தாளரான டாக்டர் ஜெயவெங்கடேஷ் விளக்குகிறார்.
நடுத்தர வயதினர் 6 மணி நேரமும், முதியவர் 8 மணி நேரமும் இரவில் தூங்கி, எழுந்து ஆசனம் செய்வது நல்லது என்பது முதல் அனைவரும் செய்யக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய எளிய சாதாரண மற்றும் சில மேம்பட்ட ஆசனங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
தாம்பத்யத்திற்கு உதவும் வீரியஸ்தம்பாசனம், முதுகுவலி, தண்டுவடவலியை
போக்கும் கடியாசனம், கால் ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்யும் வசிஷ்டாசனம், இடுப்பு வலியை குறைக்கும் தித்திப்பாசனம் என ஒவ்வொரு ஆசனத்தின் பலன்களுடன், அதை எப்படி செய்வது என்ற ஓவியமும் இடம்பெற்றுள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!