விலைரூ.120
புத்தகங்கள்
Rating
பக்கம்: 264
ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்தக் கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ், பக்தி, கலாசாரம் என்பதை இணைத்தது, இந்த நூலில் புகழ் பெற்ற, மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத் தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால், ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த இந்த மகான்கள் பெருமையும் பேசப்படும். ஆனால், தெய்வ இசையை வளர்த்த இவர்களைப் பற்றி தகவல்கள் திரட்டி, சிறந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.பரிகாச மொழி கூறி, கிண்டல் பேசி புகழ்தல் பாடல்களுக்கு கூடுதல் சுவாரசியம் தருபவை. இதைத் துவங்கியவர் மாரி முத்தாபிள்ளை, இம்முறையை, பின்னாளில் கோபால கிருஷ்ண பாரதி, அருணாசலக்கவிராயர் ஆகியோர் பின்பற்றினர் (பக்க.90).கம்பரின் இராமாவதாரம் நிறைவேறிய அதே பங்குனி ஹஸ்த திருநாளில் கவிராயரின், "இராமநாடக கீர்த்தனை பாடல்களும் அரங்கேறிய தகவலைக் கூறும் ஆசிரியர். எந்த அளவு இசையும், தமிழும், அதன் பொருளும் மக்களை
ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன என்று, சுவைபட நூல் முழுவதும் சொல்கிறார். இசை ஆர்வலர்களும், பக்தி நெறி விரும்புவோரும் படிக்க வேண்டிய நல்ல நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!