விலைரூ.125
முகப்பு » வாழ்க்கை வரலாறு » திருவருட் பிரகாச
புத்தகங்கள்
திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள்
விலைரூ.125
ஆசிரியர் : விவேகானந்தன்
வெளியீடு: வேமன் பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
பக்கம்: 200
வழக்கறிஞரான ஆசிரியர், பரிசு பெற்ற பல நூல்கள் எழுதிய சிறப்பு பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய ஆசிரியர், மண்ணும் மானுடமும் பயன்பெற இந்த நூலை எழுதியதாக முன்னுரையில் சுட்டிக்காட்டியதை, இந்த நூலை படிக்கும்போது உணர முடிகிறது.
"மாணவர்களை ஆசிரியர் அடிக்கலாமா என்பது இன்று விவாதப்பொருள். தன் அண்ணன் மகன் ஆசிரியரிடம் அடி வாங்கிக்கலங்கியபோது, அந்த ஆசிரியருக்கு இராமலிங்கர், எழுதிய பாடலில், "சிறுவர்களை அடிப்பதும் நன்றல என்மேல் ஆணை என்பதைக் குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் தந்த விதம் சிறப்பானது. அந்த ஆசிரியரை வள்ளலார் தன் கவிதையில், "தூயமன சுந்தரப் பேருடையாய் என்று அழைத்திருக்கிறார். அவர் பெயர் சுந்தரம்பிள்ளை.
இது மட்டுமல்ல, இராமலிங்கர் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள் என்றும் திருமண நாளன்று, முதலிரவில் மணிவாசகரின் திருவாசகத்தை அடிகளார் படிக்க, அவர் கேட்டு பரவசமடைந்தார் என்ற தகவலும் உண்டு. அதை, அடிகளார் தன் பாடலில் "குனித்த மற்றவரை தொட்டனன் அன்றி கலப்பிலேன் என்று கூறியதை பதிவு செய்துள்ளார்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உட்பட பல மாமனிதர்களை, அடிகள் சந்தித்ததையும் இந்த நூலில் காணலாம்.இராமலிங்கரின் "திருவருட்பா வை மருட்பா என்று கூறி, வழக்கு தொடுத்த சைவ ஆறுமுகநாவலர் வழக்காடு மன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும், அத்தீர்ப்பு பற்றியும் எழுதிய பாங்கு, தன் தொழிலில் ஆசிரியருக்கு உள்ள மதிப்பை காட்டுவதாகும் (பக்கம் 83)."விழித்திரு என்பது "தூங்காது இருத்தல் அல்ல: சிந்தனை, செயலில்,பேச்சில் விழித்திருக்க சொன்ன வாசகம் என்றும், அதற்கு ஆதாரமாக "துயிலைத் தடுப்பது நீறு என்ற ஞானசம்பந்தரது தெய்வீக தேவாரத்தை சுட்டிக்காட்டியிருப்பதும், ஆழ்ந்த ஆய்வுக்கு அடையாளம். வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி தத்துவத்தை சிறப்பாக விளக்கியிருப்பதை, இந்த நெறி பரவும் தொண்டர்கள் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!