ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான, மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, நவாம்சம், மூலத்திரிகோணம், கேந்திராதிபத்ய தோஷம், கிரகங்களின் பார்வை, பரிவர்த்தனை, அஸ்தங்கம், வக்ரகதி) ராசி கட்டங்களில் அமைத்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
புத்தகத்தின் பிற்சேர்க்கையில், வள்ளலார் அருளிய நோய் அணுகாதிருப்பதற்கான விதிமுறைகளையும் சேர்த்திருப்பது சிறப்பு. ஜோதிடம் பயில்வோருக்கு, மிகவும் பயனுள்ள நூல்.