நூலாசிரியர், பிரபலமான மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர். மனதைப் புரிந்து கொள்ள, கைக்கொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க, மொத்தத்தில் மனதை ஆள என, நூலின் முகப்பில் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, ‘மனம்’ குறித்து பல அரிய தகவல்களை நவீன உலகின் நடப்புகளை ஒட்டி எழுதியிருக்கிறார். இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்கவே முடியாத, பல விஷயங்கள் கூட இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. குறிப்பாக, பிரபல நடிகர் அமிதாப்பச்சனை, 1970 ஆண்டு, தமிழகத்தின் பிரபல விமர்சகரான க.நா.சு., சந்தித்த விவரம் பற்றிய தகவலும், ஆஸ்கார் பிஸ்டோரியஸ் என்ற 27 வயது நிரம்பிய தென்னாப்பிரிக்க இளைஞரின் ஒலிம்பிக்ஸ் அனுபவம் பற்றிய தகவலும் வியப்பளிக்கின்றன. முட்டிக்குக் கீழ் இரண்டு கால்களும் இல்லாதவர் செயற்கைக்கால்களுடன் இயங்கிய விதம் அபாரம்.
இதுபோன்ற பல தகவல்களை வாசிக்கையில், நம் குறை, நிறையை உணரவும், பிறர் மேல் முன்னேற நம் திறமையை வளர்த்துக் கொள்ளவும் நாம் ஆசைப்படுவோம். நல்ல பயனுள்ள புத்தகம்.
ஜனகன்