அமரர், கவிஞர் வாலியின், முதல் புதுக்கவிதை புத்தகம் இது. கவிதை இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தைகளையும், ரசிக்க வைக்கும் வித்தை கற்றவர் வாலி. பொய்க்கால் குதிரைகள் – மறுபதிப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. கவிஞரின் விருப்பத்திற்கேற்ப, தனிமனித புகழ் பாடும், பல கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன.
‘அது ஏன்?’ என்ற கவிதையில், ‘மரங்களில் சிலுவைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்கள், தங்களில் ஓர் ஏசுவை தயாரிக்கவில்லையே?’ என்ற, கேள்வியோடு புறப்படுகிறது வாலியின் சொல் அம்பு. அவ்வப்போது, தான் வாலிப கவிஞர் என்பதையும், நினைவூட்டுகிறார்.
சி.சுரேஷ்