கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவருக்கும் தேவையான பள்ளி உளவியல் பற்றி, நூலாசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். மாணவர்களிடம் கல்வி மேம்படுவதற்கு, பள்ளி உளவியல் இன்றியமையாதது. அந்த பள்ளி உளவியலின் தோற்றம், வளர்ச்சி பற்றி, எளிய முறையில், தெளிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்குரியது. மாநிலங்கள் அடிப்படையில், மக்கள் தொகை, எழுத்தறிவு நிலை, பள்ளி கல்வி மாணவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உளவியல் அறிஞர்களின் கருத்துகளை கூறி, ஆளுமை வளர்ச்சிக்கு வழிகாட்டி உள்ளார். இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள, தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் அருஞ்சொற்பொருள் பட்டியல்கள், ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்