ஏற்றுமதி தொடர்பாக சந்தேகம் கேட்டு தன்னிடம் வந்த 400க்கும் மேற்பட்டோருக்கு அளித்த பதில்களையும், தீர்வுகளையும், இரண்டு பாகங்களாக, நூல்களாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
இந்த நூலில், ‘பான் கார்டு’ முதல், பணத்தை கணக்கில் பெறும் வரையிலான எல்லா சந்தேகங்களுக்கும் பதில்கள் உள்ளன.
ஏற்றுமதி ஆபத்துகள், பி.பி.ஓ., பார் கோடிங், வால்மார்ட், டாலரின் ஏற்ற இறக்கம், சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொருளடக்கம் இல்லாதது குறை தான்.
அந்தந்த விஷயங்களுக்குரிய, கேள்வி – பதில்களை ஒன்றாக கொணர்ந்து, தனித்தனி பகுதிகளாக தந்து, பொருளடக்கமும் கொடுத்திருந்தால், எளிதாக இருந்திருக்கும். கால மாற்றத்தில் சிறிதும், பெரிதுமாக இன்னும் பல சந்தேகங்கள் வரும். தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மாற்றங்களையும், ஏற்றுமதியாளர் படித்து, தன்னை புதுப்பித்து கொண்டே வரவேண்டிய தொழில் இது. ஏற்றுமதி செய்வோருக்கும், புதிய தொழில் முனைவோருக்கும், பயன்தரக் கூடிய நூல்கள்.
கவிஞர் பிரபாகர பாபு