உலகப்புகழ் ‘கதை சொல்லி’ ஓ.ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது, சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும்; ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக் கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிப்பதி லாகட்டும்; வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்த உணர்வுகளைச் சொல்லி விரக்தி கூட்டுவதிலாகட்டும்;
பாலத்துக்கு ஊர்ப்பணத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கும் தலைவர், செத்துப்போன பின்பான ஊர்க்களேபரத்தைத் தானே எழுத்தால் நடத்திச் செல்லும் பரபரப்பிலாகட்டும், சுவாரசியம் கூட்டுகிறார் நூலாசிரியர்.
ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கற்பனைக் களம். சில கதைகளில் முடிவுகள் முன்பே தெரிந்து விடுகின்றன. படிக்கலாம்!
– கவிஞர் பிரபாகரபாபு