சாந்தியை கடைபிடித்து யோக வழியை பின்பற்றி தியானத்தில் ஓங்காரத்தை ஒலிக்கச் செய்து மனதின் ஆழத்தில் சென்று முழு சிந்தனையுடன் மனமுருகி கூறினால் (தியானித்தால்) அந்த சுற்றுச்சூழலே மாறிவிடும். சுற்றுபுறத்தில் வாழும் மனித மனங்கள் அமைதி அடையும். சந்தோஷம் நிலவும். ஒவ்வொரு மனிதனும் தியான யோகம் செய்தால் இந்த உலகமே, சந்தோஷமான உலகமாக மாறிவிடும். இம்சையும் வன்முறைகளும் போரும் பகையும் அழிந்து விடும். பிற உயிர்களை நேசிக்கும் இயல்பு உண்டாகும். புதிய உலகம் தோன்றிவிடும். தத்துவங்களை புரிந்து கொள்ள முடியாத, கடினமான பல புராதன யோக நூல்களை படித்து ‘ஓம்’ மந்திரத்தையும், தியான யோகத்தையும் மிகவும் எளிமையாக்கி வாசகர்களுக்கு தந்து இருக்கிறேன். இதை சாதாரண மக்களும் படித்து பயன் அடையலாம். யோகத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ளலாம்.