வழுவழு தாட்களும், வண்ண வண்ண படங்களும், எண்ணங்களை கவரும் வடிவமைப்பும் தான், ‘தி இந்து’ தீபாவளி மலரின் முதுகெலும்பு.
ஊர் மனம், ஆன்மிகம், பெண் இன்று, திரை விலாசம், இலக்கியம், வாழ்வு இனிது என, ஐந்து பாகங்களை கொண்டுள்ளது, இம்மலர். கர்னாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன், மருத்துவர் கு.சிவராமன், பறவையியலாளர் ப.ஜெகநாதன் ஆகியோரின்
நேர்காணல்களை விரிவாக பதிவு செய்துள்ளது.
கடந்த 1970கள், தமிழ் திரை உலகில் கதா நாயகர்களின் நிறம் துவங்கி, அனைத்திலும் மாற்றங்கள் பூக்கத் துவங்கிய காலகட்டம்.
அப்பத்தாண்டுகளின் குறுக்கு வெட்டு தோற்றம், திரை ரசிகர்களுக்கு பல தெளிவுகளை ஏற்படுத்தும்.
செல்வா