‘நல் நம்பிக்கையே வாழ்வின் வலுவாகும்’ என்று துவங்கும் இந்நூல், ஒவ்வொருவருக்குள்ளும் வாழும் உண்மையான, தெய்வீகமான ஆன்மா பற்றியும், கடவுள், அன்பு, தவறுகள், காமம், சுரண்டல், பேராசை, கோபம் குறித்தும், பொய்மைக் கவர்ச்சிகளான கர்வம், ஏற்றத்தாழ்வு, உண்முறை போன்றவை குறித்தும், டால்ஸ்டாயின் பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்து அளிக்கிறது.
அரசாங்கம் என்பதே மூடநம்பிக்கை; இவற்றோடு, போலிச்சமய ஒழுகலாறும், அறிவியலும் எப்படியெல்லாம் மக்களைத் திசை திருப்புகின்றன என்பதையும் விவரிக்கிறது.
‘சரீர மரணம் வாழ்வின் இறுதியன்று; ஆனால், அது ஒரு மடைமாற்றமே’ (பக்.158); ‘ஞானி எல்லாவற்றையும் தனக்குள் தேடுகிறார். பைத்தியக்காரர் எல்லாவற்றையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறார்’ (பக்.168) – இப்படி ஏராளமான கருத்துக்களை உள்ளடக்கிய வாழும் வழிகளைக் கூறும் பயனுள்ள மொழிபெயர்ப்பு நூல்.
பின்னலூரான்