முதல்வர் ஜெயலிதாவின் வரலாற்றுடன், அவர் முதல்வராக நிறைவேற்றிய சாதனைகளையும் சுருக்கமாக சொல்வது இந்த நூல்.
‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ எனும் அந்நாளைய ஆங்கில வார இதழில், ஜெயலலிதாவின் கட்டுரை வெளியானது முதல், திரைப்படங்களில் நடித்தது, அவரின் மொழிப்புலமை, பேச்சாற்றல், அரசியலுக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டது என, ஜெயலலிதாவின் வாழ்க்கை சுவடுகளை, எளிமையான நடையில் தந்துள்ளார், நூலாசிரியர்.
ஆணுக்கு பெண் சமம் என பேசப்படும் இந்த காலத்திலும், ஆணாதிக்கமே மிஞ்சியுள்ள நிலையில், ஒரு பெண்ணாக ஜெயலலிதாவின் சாதனைகளை சுட்டிக் காட்டுகிறது இந்த நூல். ஜெயலிதாவை, அன்னை தெரசா முதல், பிரபல நாளிதழ்கள் வரை பாராட்டியுள்ள கருத்துகள் தொகுத்து, நூலின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நூலை வாசிக்கும் பெண்களுக்கு, ஜெயலலிதாவின் வாழ்க்கை, ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிவா.ஜி