தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை நடிகராய் அறியப்படும் வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதியுள்ள வித்தியாசமான புத்தகம். அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் சில எளிய ஆங்கிலச் சொற்கள் பற்றியும், சில பிரபலங்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் பற்றியும், விசித்திர நம்பிக்கைகள் பற்றியும், ருசிக்கும் உணவு பதார்த்தங்கள் பற்றியும், உபயோகிக்கும் கருவிகள் பற்றியும்…
இப்படி நிறைய நிறைய விஷயங்கள் பற்றி, அவை யாவும் ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எங்கிருந்து துவங்கியது என்பது குறித்து, சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.
நதிமூல, ரிஷிமூல தகவல்களையும், வியக்க வைக்கும் விஷயங்களையும் ஆராய்ந்து, சேகரித்து, 58 அத்தியாயங்களாகத் தொகுத்ததோடு, அவற்றை சுவாரசியமாகவும், ஆவலைத் தூண்டும் விதமாகவும் வழங்கியிருக்கிறார் வெ.ஆ.மூர்த்தி. இதை அவரது திரைமொழியில் சொல்வதானால், ஒவ்வொரு கட்டுரையும் ‘மனசுல ‘பச்ச்ச்சசசசக்க்க்’னு ஒட்டிக்குது.
ஸ்ரீநிவாஸ் பிரபு