கி.மு., 1000 முதல், கி.பி., 1300 வரை நடந்த, வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு, முற்கால இந்தியா. இன்றைய இந்தியா, எவ்வாறு இந்நிலையை வந்தடைந்தது என, இப்புத்தகம் விளக்குகிறது. ஹரப்பா மற்றும் கங்கை சமவெளி நகரமயமாதல், மகாவீரர், புத்தர் வரலாறு, நந்த வம்சம், அசோகரின் ஆட்சி உள்ளிட்ட வரலாறுகள் இதில் உள்ளன. சமுத்திரகுப்தர் முதல், ராஜராஜ சோழன் வரையான காலக்கட்டத்தில் நடந்த, இந்திய வரலாற்றை விரிவாக இந்நூல் அலசி ஆராய்கிறது.