ஹிப்னாடிசம் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்கு, ‘தூக்கம்’ என்று பொருள். ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவரைத் தூங்க வைப்பது. ஒருவரை தூங்க வைத்து அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்த் தன்மையைப் போக்கிக் குணமாக்குவது.
ஹிப்னாடிசம், அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி செய்யக் கூடிய மனம் சார்ந்த மருத்துவக் கலை.
இதை மனோவசியம் அல்லது யோக முத்திரை என்றும் கூறுவர். இந்த மகத்தான கலையை கற்பதன் மூலம் தனக்குத்தானே அற்புதமான தூக்கத்துக்கும், நம் உடம்பில் உள்ள நோய்களை நமக்கு நாமே தீர்த்துச் சுகமாக்கியும் கொள்ளலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் நூலாசிரியர். அதற்குப் பலவிதமான பயிற்சிகளையும், அவற்றைப் பழகும் முறைகளையும் வெகுவாக விரித்துரைக்கிறார்.
இக்கலையை கற்க விரும்பும் அன்பர்கள் தாமே நேரடியாக முயலாமல், தகுந்த ஆசிரியர் ஒருவரது மேற்பார்வையில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது.
– சிவா