ஓவியர் மாருதியின் கை வண்ணத்தில் ராதை – கிருஷ்ணரின் அட்டகாசமான படத்தில் மனம் லயிக்கிறது.
அட்டையை திருப்பினால், ஸ்ரீரங்கம் கோவில் பின்னணியில், கம்பீரமான யானை படம் கொள்ளை கொள்கிறது. அதை அடுத்து, ஓவியர் வேதாவின் துாரிகையில், பிள்ளையார் உயிர்பெற்று காட்சி தருகிறார்.
ஆன்மிக பெரியோர் பலர் எழுதிய கட்டுரைகள், படிக்க படிக்க திகட்டாதவை. இதுதவிர, கவிதைகள், ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘பழங்கால தமிழர் வரலாறு விளக்கும் அதியமான் பெயர் பொறித்த நாணயம்’ கட்டுரை, ஓவிய மேதை கோபுலு மற்றும் பாலைவனத்து அதிசயங்கள் போன்ற பொது கட்டுரைகள் பலவும், இடம் பெற்றுள்ளன.
ஏராளமான ஆன்மிக தகவல்களுடன், பக்தி கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இடை இடையே வெளியாகியுள்ள கடவுள் படங்கள், ‘பிரேம்’ செய்து வைத்துக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் பாதுகாத்து, படிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது.