விளையாட்டுப் பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. பக்கங்கள்: 114;
அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதியோடும், அன்போடும், நட்புறவோடும், ஆனந்தத்தோடும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் இதற்குத் துணை புரிவது விளையாட்டுக்கள் தான். தனிமனிதனின் உடல் நலத்திற்கும், உள்ள நலத்திற்கும் பேருதவியாய்த் திகழ்வது விளையாட்டுக்களேயாகும். விளையாட்டுகளுக்கு ஈடாக வேறு ஒன்றையும் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.
மனித வரலாறு என்றும் இனியவை; புதியவை; எண்ணிலடங்காத அற்புதங்கள் நிறைந்தவை; மன எழுச்சிக்கு விருந்தானவை; படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தரும் கருத்துக் கருவூலமாகத் திகழ்பவை. அதிலும், கிரேக்கர்களின் விளையாட்டு ஆர்வத்தையும், தனித்தன்மை மிக்க வாழ்க்கையையும் சுவையான தமிழில், மனதைக் கவரும் வகையில் படைத்த என் தந்தையின் எழுத்தாற்றல், படிப்போர் நெஞ்சம் மகிழும், புதிய உத்வேகம் பெறும் என்பது திண்ணம்.
விளையாட்டுக் களஞ்சியம் எனும் மாத இதழை என் தந்தையார் இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். அதில், பல்வேறு தலைப்புகளில் சுவையாக எழுதி வந்ததை யாவரும் அறிந்ததே. தற்போது நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து தமிழ் மக்களுக்காக புத்தக வடிவில் வெளியிட்டு வருகிறோம்.
துடித்தெழும் தமிழக இளைஞர் கூட்டம் ஒலிம்பிக் பந்தயம் சென்று வாகைசூட வேண்டும் என்ற பேரார்வத்தில் இந்நூலை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
- ராஜ்மோகன் செல்லையா.