ஒரு வரியில் காதலைப் பற்றிச் சொல்வதென்றால், சகல விதத்திலும் பரஸ்பரம் சவுகர்யமாக உணர்வது என்று சொல்லலாம். இந்த நாவல் அதற்கான நிரூபணம்.
இந்த நாவலை படிக்கத் துவங்கியதுமே, இதில் வரும் ஜென்சியும், கவுதமும் மின்னல் வேகத்தில் அவரவர் அந்தரங்க நினைவுகளுக்குள் அழைத்துச் சென்று, நிகழ்வுகளோடு கச்சிதமாய் பொருத்திப் பார்க்க வைத்து விடுவர்.
நேசிப்பின் அத்தனை பரிமாணங்களையும் இந்தக் கதை அப்பட்டமான யதார்த்தத்துடன் பதிவு செய்கிறது. ஒரு விடியலுக்கு முந்தைய இரவு... மற்றொரு அஸ்தமனத்திற்கு முந்தைய இரவு ஆகிய பொழுதுகளில் நிகழும் அப்பழுக்கற்ற கணங்களை, காதலின் நிரூபணமாக்குகிறது இந்த நாவல்.
இரண்டே கதாபாத்திரம் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் இந்த உயிரோவியத்தை படித்துப் பாருங்கள்.