பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி கைலாசபதி பேராசிரியர் சிவத்தம்பி முதலிய பேராளுமைகளே – புதுக்கவிதை என்பவை பொருளற்ற பிதற்றல்கள் என ஒதுக்கித் தள்ளினர்.
புதுக் கவிதையில் முற்போக்கு அம்சம் உள்ளவையும், பிற்போக்கு அம்சம் உள்ளவையும் உள்ளன என்று பிரித்துக் காட்டினார் வானமாமலை என்ற பதிவும் உள்ளது.
– எஸ்.குரு