‘உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும் இறைவனுக்கே, கொழுக்கட்டை, இறை இல்லம், இறைவனிடம் கையேந்துங்கள்’ ஆகிய சிறுகதைகள், நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிலும், பொருளாதார நிலையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற, கல்வி ஒன்று தான் கருவியாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் சிறுகதைகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.