அட்டையில் மீரா கிருஷ்ணன் வண்ண ஓவியத்தைக் காணலாம். நாட்டில் உள்ள புல்லுருவிகளை அழிக்க, கிருஷ்ண பரமாத்மா தோன்ற வேண்டும் என்ற மையக் கருவை இந்த மலர் வலியுறுத்துகிறது. காஞ்சி மகா பெரியவர் தனக்கு மிகவும் பிடித்த பண்டிகை, ‘ஆதிசங்கரர் ஜெயந்தி’ என்ற தகவலுடன் மலர் துவங்குகிறது.
அலாவுதீன் தமிழக கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடித்த துலுக்க அரசர். வெள்ளையம்மாள் என்ற மகராசி, கோவில் கொள்ளையை அடுத்து நடத்த வந்த உபதளபதியை கோபுர மாடத்தில் ஆசைகாட்டி, ஏற்றி கொலை செய்கிறாள். ஸ்ரீரங்கம் கோவில் பொக்கிஷம் தப்பியது. அதனால், அவளது விருப்பப்படி அக்கோபுரம் வண்ணமின்றி வெள்ளையாக இன்றும் உள்ளது.
வரலாற்றைச் சொல்லும் அழகான தகவல், நாகப்பட்டினத்தின் புராண காலப் பெயர், காரணம் ஆகியவையும், கிரக தோஷம் பற்றி பேசும் பலரும் படித்து பல விஷயங்களை அறியலாம். ஆடிட்டர் நாராயணசாமி எழுதிய ராஜாஜியுடன் கூடிய நட்பு, இசைக்கவி ரமணன் எழுதிய கடவுளும், கவிஞனும் மற்றும் இறை சம்பந்தமாக உள்ள பெட்டிச் செய்திகளும் மலரை சிறப்பாக்குகின்றன.