‘நான் கண்ட அந்தமான்’ என்னும் இந்நுால் பயணக் கட்டுரை நுாலாகும். இந்நுாலில், 13 தலைப்புகளில் அந்தமான் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.
‘அந்தமான் அழகிய பயணம்’ என்னும் கட்டுரையில், அந்தமான்... இந்த ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போதெல்லாம் அழகு என்ற மயக்கம் நம்மை மெய் மறக்கச் செய்து விடுகிறது.
‘அந்தமானைப் பாருங்கள் அழகு...’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், மனதுக்குள் மத்தாப்பு பூத்துக் குலுங்கும் என்பதைக் காணலாம்.
அந்தமானில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று செல்லுலர் சிறை; இந்த சிறைக்கு மகாத்மா காந்தி, 1930களில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடன் இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக, பிரிட்டன் அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணா நோன்பு மேற்கொண்டார்.
மேலும், 1937 – 38களில் இங்குள்ள அரசியல் கைதிகளை தாயகம் திருப்பி அனுப்ப, பிரிட்டன் முன்பு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது போன்ற செய்திகள் உடன், வழக்கமான பயணக் கட்டுரைகளைப் போல் இல்லாமல், நல்ல படங்களுடன் புதிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
– முனைவர் க.சங்கர்