பக்தி இலக்கியங்கள் என்பது வேறு; ஆனால், புனிதத் தலங்களைத் தேடிச் சென்று வாழ்வின் பயனைத் துய்க்கும் பலரில், நுாலாசிரியர் பத்மாவதி குமரனும் ஒருவர். மிகப்பெரும் பாரம்பரியத்தைச் சேர்ந்த இவர் குழந்தையாக இருக்கும் போது, ரமணர் கையில் தவழ்ந்த அரிய பேறு பெற்றவர்.
இந்தியாவில் உள்ள மிகப் புகழ் மிக்க கோவில்கள் மட்டுமின்றி, மலேஷியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களின் சிறப்பை வண்ணப் படங்களுடன், வழு வழு தாளில் தகவல் ஆக்கிய இந்நுாலாசிரியர், தங்கள் குலத்து மெய்யாத்தாளை உடன் அழைத்துச் சென்று வழிபட்டது போல வர்ணித்திருப்பதை, நுாலைப் படித்ததும் உணரலாம்.
பக்திக் கையேடு, பயண நுால் என்பதோடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நுாலாக இது அமைந்து இருப்பதை படிப்பவர் அனைவரும் அறியலாம்.