இந்நுாலினுள் பவளவிழா காணும் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றத்தின் பணியும் பயணமும், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் அடிச்சுவடுகள், தே பிரித்தோ பள்ளியின் அரிய நிழற்படங்கள் போன்றவற்றை தொகுத்து தந்திருப்பது, நுாலுக்கு அணி சேர்க்கிறது.
நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றி பெருமைப்படுத்தவும், இன்றைய கலை இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி அடையாளப்படுத்தவும், நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கப்படுத்தி அறிமுகப்படுத்தவுமான, மூன்று நோக்கங்களும் நிறைவேறியுள்ளது என்பதை, இந்நுாலைப் படிப்போரால் அறிந்து கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
– மாசிலா ராஜகுரு