வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் தவறான அனுமானங்களை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நினைத்ததை சாதிக்க முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை நாம் உணராமல் போவது தான்.
இது தான் இந்த புத்தகத்தில் நுாலிழையாய் தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது. எதையும் மாத்தி யோசி என்பது தான் எழுத்தாளரின் கண்ணோட்டம்.
இப்படி ஆகிவிட்டதே என வருந்துவதை விட, எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். மாற்று சிந்தனையின் வழிநடப்பதே எதிர்மறை எண்ணங்களை துடைத்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்.
அந்த வகையில் நேரடி அறிவுரையாக சொல்லாமல், ஒரு கதை சொல்லி போல சிறு சிறு கதைகளை எழுத்தோட்டத்தில் இணைத்து, அதன் வழியே தீர்வுகளை சொல்கிறார் நுாலாசிரியர்.
நுாலாசிரியரைப் போல எல்லாவற்றையும் வேறொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தால் பாராட்டு நமக்கும் நிச்சயம் தான்.
– எம்.எம்.ஜெ.,