எளிய நடையில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து பின்னப்பட்டவை. ஒரே மூச்சில் படித்துவிட துாண்டுகின்றன.
நாய் குட்டி ஒன்றை, மூன்றாவது மாடியில் இருந்து வீசும் இளைஞன் பற்றிய கதை மிகவும் முக்கியமானது.
அனைத்தும் முயற்சி, தன்னம்பிக்கை உழைப்பு, விடாமுயற்சி, யதார்த்தம் என்ற அடிப்படை வகைகளுக்குள் அமைந்துள்ளன. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்ற சிறுகதை மிகவும் சிறப்பானது.
தவறிப்போகும் பெண்களை நெறிப்படுத்துவதாக அதன் கரு அமைந்துள்ளது. படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பாகும்.
புலவர் இரா.நாராயணன்