திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும் திருத்தலமாகத் திருப்பட்டூர் ஈசன்; திருமணத்தை நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி; பல நோய்கள் தீர்க்கும் பல திருத்தலங்கள்; ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலங்கள்; கடன்
தொல்லைகளை தீர்க்கும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் என்ற சிறப்பானதொரு தகவல். இழந்த பதவி கிடைக்க அச்சிறுபாக்க ஆட்சி புரீஸ்வரர் திருக்கோவில்; திருமணத் தடைகள் நீக்கும் திருவிடந்தை பெருமாள்; சனி தோஷம் போக்க திருகொள்ளிக்காடு சனீஸ்வரர்; பிரிந்த தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திருநீலக்குடி கோவில்; கல்வியில் மேன்மையடைய
திருவெண்காடு என அனைத்திற்கும் பிரார்த்தனை, தல வரலாறு, சிறப்பு, அக்கோவில்களுக்குச் செல்லும் வழிகள், முகவரி, தொலைபேசி எண், வழிபாடு நேரம் எனவும் அமைகிறது நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்