ஆசிரியரின் முன்னுரையே, புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை துாண்டி விடுகிறது.
பயண நுாலாய் ஆரம்பித்து, சரித்திரத்தை காட்டி நிறைவு செய்தது சிறப்பு. ஆன்மிகம் என்றால், கோவில் கோவிலாகச் சென்று இறைவனின் சிறப்புகளைச் சொல்வது தான் என்கிற மாதிரி கம்போடியாவில் இல்லை. அங்கோர்வாட் ஹிந்து கோவிலில் சுவாமி சிலைகள் வித்தியாசமான அனுபவம் தரும்.
இறப்புகளையும், இழப்புகளையும் தொடர்ந்து சந்தித்து வந்ததன் விளைவாக, அங்குள்ளோர் முகங்களில் மென்மையான சோகத்தை காட்டுவதாக அறிய முடிகிறது.
ஒவ்வொரு கோவிலின் சிறப்பையும் அழகாக விவரிப்பதால், அந்த இடத்துக்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்கேற்ற புகைப்படங்களும் கம்போடியாவுக்கு வந்து பாருங்களேன் என்று கூறுகிறது.
எழுத்துக்கு சாட்சியம் கூறும் புகைப்படங்களுடன் நிறைவான பயணக் கட்டுரை படித்த உணர்வு ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகை ஆன்மிக பயணம் தான்.
– எம்.எம்.ஜெ.,