உலக சமயமாக உருவெடுத்து பரவிய பவுத்தம், பாண்டிய மண்டலத்தில் வளர்ச்சி பெற்றதை ஆய்வு செய்துள்ள நுால். ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. பாண்டியர் பெயர்க் காரணம், வாழ்க்கை முறை மற்றும் பாண்டிய மண்டல ஆட்சிகள் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.
சேர, சோழ, பாண்டியர் ஆண்ட தொன்மை நிலப்பரப்புகள், அதற்கான அசோகர் காலக் கல்வெட்டுச் சான்றுகள் விளக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இலக்கியக் குறிப்புகள், செப்பேடு, கல்வெட்டுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.
கி.மு., 3ம் நுாற்றாண்டில், பாண்டிய மண்டலத்தில் நுழைந்த பவுத்த வளர்ச்சியும், செல்வாக்கும் காலக் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன.
தமிழ் மண்ணில் ஆழ்வார், நாயன்மார் இயக்கங்களின் எதிர்ப்பாலும், சமண சமயத்தின் தாக்குதல்களாலும் வீழ்ச்சி அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பவுத்த சமயத்தின் தோற்றமும், வீழ்ச்சியும் கூர்ந்த வரலாற்று அணுகுமுறையோடு ஆய்ந்து படைக்கப்பட்டுள்ள நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு