உலகளவில் கற்றல், கற்பித்தலுக்காக, குழந்தைகளின் நலன் கருதி பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கற்றல் திறன் என்பது மொழித்திறன். அதன் கல்வி வளர்ச்சியும், சமூகத்தில் உயர்வுகளும் முக்கிய காரணிகளாகும். இந்த நுால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது.
குழந்தையின் வளர்ச்சி அதன் மேம்பாடு என துவங்கி, 10 தலைப்பின் கீழ் பல உட்தலைப்புகளை கொண்டு முழுமையான கற்றலுக்கான நுாலாக அமைந்துள்ளது.
மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் பேசுதல், வினா எழுப்புதல், மாணவர்களின் ஐயங்களுக்கு தகுந்த விடையளித்தல், மாணவர்களின் தேவைக்கேற்ப பேசுதலுக்கு வாய்ப்பளித்தல் போன்றவை மொழி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
குழந்தைகளின் விளையாட்டை ஊக்குவிக்கும் காரணிகள் இரண்டு நிலைகளாக அமைகின்றன. தன்னை சார்ந்தவை மற்றும் சுற்றுச்சூழல் சமூகத்தை சார்ந்தவை என்று வகைப்படுத்துகிறது. கற்றல், கற்பித்தல் துறையில் சிறந்த நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்