ஜெயங்கொண்டம் தொகுதி சட்டசபை உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கொ.இரா.விசுவநாதன், சட்டசபையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றிய உரைகள் நுாலாக்கப்பட்டுள்ளன. எழுச்சியூட்டும் இவரது உரைகள், குலக்கல்வித் திட்டத்தை தோல்வியுறச் செய்தன. இறுதியில் இவரது வாழ்க்கை வரலாறு தரப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில், 1952ல் ஆற்றிய உரையில், கங்கைகொண்ட சோழபுரத்தில், மன்னன் முதலாம் ராஜேந்திரன் செய்த திருப்பணிகளும், ஏரி, குளம் நீர்ப்பாசன மேலாண்மையும், அவற்றைப் பராமரிக்காததால் ஏற்பட்ட பஞ்சம் பற்றியும் கூறியுள்ளார்.
முந்திரித் தொழிலை மேம்படுத்த வாதாடியுள்ளார். பிற்படுத்தப்பட்ட ஏழைகள் முன்னேறவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் எழுப்பிய உரிமைக் குரல், 70 ஆண்டுகள் கடந்தும் சிந்திக்க வைக்கிறது.
– முனைவர் மா.கி.ரமணன்