மகாபாரதத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஓரிரு பக்கங்களில் எடுத்துரைத்து, அவற்றிற்கேற்ற குறட்பாக்களை தந்துள்ளார் நுாலாசிரியர். எளிய நடையில் நிகழ்வுகளைச் சிறுகதைகளாகச் சொல்லி, பொருத்தமான குறளை எடுத்துக் காட்டியுள்ளார். இறந்தாரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை அறிந்து கொள்வதற்காக, சுக்கிராச்சாரியாரிடம் சீடனாக வந்த கசன் கதையில், மதுவின் கொடுமையைச் சுக்கிராச்சாரியார் கூறுவதை, ‘உட்கப்படாஅர் ஒளியிழப்பர்’ என்ற குறளை எடுத்தாள்கிறார் நுாலாசிரியர்.