பிரிட்டிஷ் ஆட்சி கால ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஆங்கிலேயர் வருமுன்பே உன்னதமாக விளங்கிய இந்திய பாரம்பரியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், காந்திக்கு முன்பான ஒத்துழையாமை இயக்கம், பஞ்சாயத்து ராஜ் பற்றி, காந்தியவாதி தரம்பால் எழுதிய நுால்களின் முன்னுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நுால்.
இந்திய உன்னதங்களை எடுத்துரைக்கும் தரம்பாலின், ‘அழகிய மரம் – 18ம் நுாற்றாண்டில் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி, அழகிய நதி – இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், அழகிய போராட்டம் – காந்திக்கு முன் ஒத்துழையாமை இயக்கம், அழகிய கிராமம் – பஞ்சாயத்து ராஜ்’ ஆகிய சாராம்சத்தை உள்ளடக்கியது.
வரலாற்றுத் தகவல்கள் வியக்க வைக்கின்றன. தரம்பாலின் தீவிர ஆராய்ச்சியால் இந்திய பெருமை சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அறியப்படாத வரலாற்றுத் தகவல்களை பதிவு செய்துள்ள நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு