ஆசை, கனவு, வேண்டுதலால் மட்டும் வெற்றி கிடைப்பதில்லை. தனிப்பட்ட கட்டுப்பாட்டு, திறன்களை பயன்படுத்துவதன் வழியாக வெற்றி கிடைக்கிறது என்பதை உணர்த்தும் தன்னம்பிக்கை நுால்.
சிந்தனை, அனுபவங்களை கட்டுரைகள், கவிதைகள், கதைகள் வழியாக எளிய நடையில் வெளிப்படுத்தி உள்ளார். வாழ்வில் எத்தனை பெரிய சவால்களை சந்தித்தாலும், அவற்றை தகுந்த முறையில் எப்படி கையாளுவது என்பதை விளக்குகிறது.
தன்னம்பிக்கை உயர்ந்தால், சுயமதிப்பு, சுயகட்டுப்பாடு அதிகரிக்கும், வாழ்க்கை இனிக்கும்; சுய சந்தேகங்கள், பதற்றம் மறையும், மன அழுத்தம், எதிர்மறை எண்ணங்கள் குறையும், சுய ஊக்குவிப்பு அதிகரிக்கும், வெற்றியின் மீது நம்பிக்கை ஏற்படும் என கூறுகிறார்.
இதற்காக, பல மேற்கோள்களை சுட்டிக்காட்டி உள்ளார். இந்நுாலை வாசிப்போருக்கு ஒரு வித உற்சாகம், தன்னெழுச்சி ஏற்படும். துவண்டு கிடப்போருக்கு தன்னம்பிக்கை ஊட்டும். வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்