அன்றாடம் அருகே நடமாடும் கதாபாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்; முத்தான 22 கதைகள் உள்ளன. கதைகள் அனைத்திலும் தவறாமல் சந்திக்கிற, சந்தித்த மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது. அருகே வசிப்பவர்களை கூர்ந்து நோக்கும் அனுபவம் இந்த கதைகளை படிக்கும் போது ஏற்படுகிறது. அதன் வழியாக சுயத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
நடமாடும் கதாபாத்திரங்கள் என்பதால் சுயமும் அங்கமாகி விடுகிறது. எனவே, வாழ்வை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை தரும் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. தவறுக்கு அவதிப்படுவோர், மனதில் மறைந்திருக்கும் மற்றொருவரின் செயல், செயல் குறுக்கீட்டுக்கு அலைபாயும் மனம் என பல வகை பண்புகளை கதைகளின் ஊடாக காண முடிகிறது.
பெண்களின் பிரச்னை பற்றி பேசும் கதைகளும் உள்ளன; ஆண்கள் பிரச்னையையும் விட்டு வைக்கவில்லை; பல்சுவையும் கலந்த சிறுதை தொகுப்பு நுால்.
– மலர்