மாணவர்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டிய தலைவர்கள், கவிஞர்கள், மருத்துவம், விளையாட்டு என, 60 தலைப்புக்களில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். இந்திய ரூபாயின் வரலாறு பற்றி எழுதிய விபரங்கள் கருத்துப் புதையல். 1840ம் ஆண்டு வரை வெள்ளியிலேயே நாணயங்கள் வெளிவந்தன என்பதும், முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட வெள்ளியின் தட்டுப்பாட்டால் மற்ற உலோகங்களுக்கு மாற்றி நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பதும் அறிய வேண்டிய செய்தி.
ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் மதிப்பும் காந்தி படமும் பார்த்திருப்போம். அதில் 15 இந்திய மொழிகள் இருப்பது இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல கடிதங்கள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு 25 கடித மாதிரிகள் இணைத்துள்ளது பயன் தரக்கூடியது.
– சீத்தலைச்சாத்தன்